இது நல்லதற்கு அல்ல! அர்ஜூன ரணதுங்கவின் எச்சரிக்கை

Report Print Steephen Steephen in அரசியல்

நல்லாட்சி அரசாங்கம் அமுல்படுத்திய எரிபொருள் விலை சூத்திரம் நடைமுறையில் இருந்திருந்தால், தற்போது எரிபொருள் விலைகளை மேலும் குறைத்திருக்க முடியும் என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கண்டியில், தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் தற்போதுள்ள நிலைமை நாட்டுக்கு நல்ல நிலைமையல்ல. இது தொடர்பாக நேற்று மாலை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டது. இது குறித்து மற்றுமொரு பேச்சுவார்த்தை நடத்த இரண்டு தரப்பும் இணங்கியது.

அந்த பேச்சுவார்த்தையின் பின்னர், சில தினங்களில் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன். இல்லை என்றால், உள்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியிலும் பிரச்சினைகள் ஏற்படக் கூடும் எனவும் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.