ஜனநாயகத்தை பாதுகாக்க பதவியையே கைவிட்டேன்! வடிவேல் சுரேஷ்

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக தான் ராஜாங்க அமைச்சர் பதவியை கைவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பின் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகம் ஆபத்தில் தள்ளப்படுமாயின் பதவிகளால் பயனில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மலையக சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைப்பது நல்லது.

ராஜபக்ச அரசாங்கத்தில் கிடைத்த அமைச்சர் பதவிக்கு பதிலாக ஐக்கிய தேசியக் கட்சியை வலுப்படுத்த அதன் ஊடாக கிடைக்கும் பதவியை கொண்டு மக்களுக்கு சேவை செய்வது சிறந்தது.

இறுதியில் கோடிக்கணக்கில் பணத்தை கொடுக்கவும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை வழங்குவதாகவும் கூறி, மகிந்த தரப்பினர் தனக்கு அழைப்பு விடுத்தனர என்றும் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.