ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் தெரிவு ரணில் விக்ரமசிங்க தான்!

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் தெரிவு ரணில் விக்ரமசிங்கவே என ஐ.தே.க உறுதியளித்துள்ளது.

ஐ.தே.கவின் தவிசாளர் கபீர் ஹாஷிம் இதனை உத்தியோகப் பூர்வமாக அறிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தனுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நியமனம் குறித்து ஜனாதிபதிக்கு சம்பந்தன் அனுப்பிய கடிதத்தை கோடிட்டு காட்டி இந்த கடிதத்தை கபர் ஹாஷிம் அனுப்பி வைத்துள்ளார்.

இதன் பிரதி ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.