வவுனியா தமிழ் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பதவி உயர்வு

Report Print Theesan in அரசியல்

வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் பணியாற்றும் நமசிவாயம் ஜெயப்பிரகாஷ் என்ற தமிழ் பொலிஸ் உத்தியோகத்தருக்கு சார்ஜன் தர நிலைக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்த பதவி உயர்வு இன்று பொலிஸ்மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் உத்தியோகத்தராக கடமையாற்றி தற்போது வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றார்.

வன்னிப் பிரதிப் பொலிஸ் மா அதிபருடன் தமிழ் மொழிப்பெயர்ப்பாளராகவும் தனது சேவையை மேற்கொண்டு வருகின்றார்.

இதேவேளை, இவரின் இச் செயற்பாட்டினால் பல மக்களின் பிரச்சினைகளுக்கு இலகுவில் தீர்வுகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.