தமிழர் ஒருவர் புலனாய்வு அதிகாரியாக இருக்கக்கூடாதா?

Report Print Kamel Kamel in அரசியல்

தமிழர் ஒருவர் புலனாய்வு அதிகாரியாக இருக்கக் கூடாதா என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பின்னர் அந்த உத்தரவு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்ட நிசாந்த சில்வா என்ற புலனாய்வு அதிகாரி தொடர்பில் செய்யப்பட்ட பிரச்சாரம் ஒன்று குறித்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச மற்றும் அவரது சட்டத்தரணிகள் மிகவும் இழிவான இனவாத அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சட்டத்தரணிகள் இந்த இழிவான பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

நிசாந்த சில்வா தமிழர் எனப் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாகவும், அவ்வாறு தமிழராக இருந்தால் அவர் புலனாய்வுப் பிரிவு அதிகாரியாக இருக்கக் கூடாதா? என டுவிட்டர் பதிவுகளின் மூலம் ரஞ்சன் ராமநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

கௌரவ நாட்டு மக்களே உங்களுக்கு நீங்கள் விரும்பிய கொள்கையை பின்பற்ற முடியும், மஹிந்த, மைத்திரி, ரணில் அல்லது அனுர குமார உள்ளிட்ட எந்தவொரு அரசியல்வாதியின் கொள்கையையும் பின்பற்றும் உரிமையும் சுதந்திரமும் உங்களுக்கு உண்டு, எனினும் நீங்கள் தெரிவு செய்ய வேண்டியது அநாகரீகத்தை விடவும் நாகரீகத்தையேயாகும் என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, நிசாந்த சில்வாவின் தந்தை ஒர் தமிழர் அவரது பாட்டனாரின் பெயர் கந்தப்பா, தந்தை தமிழ் என்றால் மகனும் நிச்சயமாக தமிழர் தான்.

பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா என் கந்தப்பா என்ற பெயரை ஏன் பயன்படுத்துவதில்லை என அஜித் பிரசன்ன என்னும் மஹிந்த தரப்பு முன்னாள் படையதிகாரியின் டுவிட்டர் பதிவு ஒன்று தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க பதிலடி கொடுத்துள்ளார்.