நாடாளுமன்றின் உத்தியோகப்பூர்வ இணையத்திலிருந்து நீக்கப்படும் பிரதமர் மகிந்தவின் பெயர்?

Report Print Jeslin Jeslin in அரசியல்

நாடாளுமன்ற இணையத்தளத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ச என்று குறிப்பிடப்பட்டுள்ள பதிவை நீக்கி விடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் எஸ்.எம். மரிக்கார் ஆகியோர் சபாநாயகரிடம் குறித்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இடம்பெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் சபாநாயகர் இந்த அரசாங்கம் கலைந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.

இதன் பின்னரும் நாடாளுமன்ற இணையத்தளத்தில் பிரதமர் என்ற பதவி மகிந்த ராஜபக்சவுக்கு சேர்க்கப்பட்டிருப்பது தவறானது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.