அடம்பிடிக்கும் மைத்திரி! விடாப்பிடியாக சஜித்

Report Print Jeslin Jeslin in அரசியல்

தற்போதைய சூழ்நிலையில் பிரதமர் பதவியைத் தான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நடத்திய பேச்சுக்களின் போதும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்தநிலையிலேயே, பிரதமர் பதவியைத் தற்போது தான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

இந்த நேரத்தில் பிரதமரின் பதவியை ஏற்றுக்கொள்ளும் நோக்கம் இல்லை,

ஆனால் எதிர்கால நாடாளுமன்றத் தேர்தலில் ஐதேகவின் கட்சியின் பிரதமர் வேட்பாளராக இருக்கக் கூடும்.

எனினும், அதுபற்றி கட்சியின் செயற்குழு தான் முடிவு செய்யும்.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்பதே கட்சியின் உறுதியான நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.