செவ்வாய்க்கிழமை நாட்டுக்கு மைத்திரி கூறவுள்ள விசேட செய்தி! காத்திருக்கும் மாற்றங்கள்

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி நாட்டில் ஏற்படுத்தப்பட்ட திடீர் அரசியல் திருப்பம் அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலைகள், நெருக்கடி இன்றுவரை ஓய்ந்தபாடில்லை.

இது தொடர்பாக பல்வேறு அரசியல் தரப்பினருக்கும் ஜனாதிபதி மைத்திரிக்கும் இடையில் தொடர் பேச்சுவார்த்தைகள் பல இடம்பெற்றுவந்தன.

இந்நிலையில், ஏற்பட்டுள்ள அரசயில் நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணுவது தொடர்பில் பலராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த நெருக்கடி நிலை தொடர்பில் நாட்டு மக்களுக்கு மைத்திரி உரையாற்றவுள்ளார்.

நேற்றைய தினம் பல அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட மைத்திரி செவ்வாய்க்கிழமை ஆற்றவுள்ள விசேட உரையின்மூலம் பல மாற்று யோசனைகளை முன்வைக்கலாம், பதவி நிலை தொடர்பான பல தீர்மானங்களை அறிவிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.