மைத்திரியின் கொலை சூழ்ச்சியின் பின்னணியில் யார்? பொன்சேகா வெளியிட்ட தகவல்

Report Print Sinan in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நான் கொலை செய்ய திட்டம் தீட்டியதாக தற்போது கூறுகின்றார். தற்போது அவரை நினைத்தால் நடத்துனர் போல இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

ஜனாதிபதிக்கு கொலை பயம் இன்று, நேற்று வந்தது கிடையாது. அவர் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் ஒரு மேடையில் பேசும் போது, பண்டாராநாயக்க மற்றும் காந்தி போன்றோரை கொலை செய்ததாகவும் தன்னையும் கொலை செய்ய போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முன்னெடுக்கும் சதி முயற்சிகளுக்கும் தனக்கும் தொடர்புள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரித்துள்ளார்.

இதேவேளை, சிறிசேனவை கொலை செய்வதற்கான சதி முயற்சிகள் இடம்பெறுகின்றன என்ற தகவலை வெளியிட்ட நாமல்குமார ஒரு புலனாய்வு உத்தியோகத்தர். ஜனாதிபதி அவரிடமிருந்தே தகவல்களை பெறுகின்றார் என பொன்சேகா அண்மையில் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.