சுமந்திரனின் சதி நடவடிக்கை! நாடாளுமன்றில் சிக்கப் போகும் மஹிந்த

Report Print Vethu Vethu in அரசியல்

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிகள் மீண்டும் இணைந்து ஆட்சியை முன்னெடுக்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மீண்டும் கூட்டு அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான ஆலோசனை எதிர்வரும் 5ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

அதற்காக இரண்டு தரப்பினதும் சிரேஷ்ட உறுப்பினர்கள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஏற்படுத்தி கொண்ட இணக்கப்பாட்டிற்கமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த நாடாளுமன்ற அமர்வுகளின் போது சர்ச்சைக்குரிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டு பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றில் அறுதிப்பெரும்பான்மை இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்டது. எனினும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மறுத்திருந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் ஐந்தாம் திகதி மீண்டும் நாடாளுமன்றம் கூடவுள்ளது. இதன்போது மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இலத்திரனியல் முறையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆலோசனையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வழங்கியுள்ளார்.

அண்மைக்காலமாக சுமந்திரனின் ராஜதந்திர நகர்வுகளுக்கு அமையவே ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருவதாக பலரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது புதிய பிரதமரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.