சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை மைத்திரி இழப்பாரா

Report Print Kamel Kamel in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீக்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு சிங்கள ஊடகமொன்று இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் ஊடாக யோசனை ஒன்றை முன்வைத்து கட்சியின் யாப்பில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன.

மத்திய செயற்குழுவிற்கு இந்த யோசனை முன்வைப்பதற்கு முன்னதாக கட்சியின் தலைவர்களின் யோசனையாக இந்த திருத்தம் முதலில் முன்வைக்கப்பட உள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஓர் பின்னணியில் மைத்திரியை சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு முயற்சிக்கப்படுவதாக குறித்த கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.