அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக சென்ற பெருந்தொகை இலங்கையர்

Report Print Vethu Vethu in அரசியல்

கடந்த 5 வருட காலப்பகுதியில் சட்டவிரோதமாக அரசியல் தஞ்சம் கோரி அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்த 5 பேரில் ஒருவர் இலங்கையர் என அந்நாட்டு உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

2013ஆம் ஆண்டிலிருந்து 34 சந்தர்ப்பங்களில் 827 பேர் கடல் மூலம் அரசியல் தஞ்சம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு நுழைய முயற்சித்துள்ளனர். அவர்களில் 166 பேர் இலங்கையர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரையில் அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்கான வழிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

அதேபோல் கடந்த காலப்பகுதிக்குள் அவுஸ்திரேலியாவுக்குள் 78 முறை நுழைய முயற்சித்த 2525 பேர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 614 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.