சிறிசேனவும் இருந்தார்! இதுதான் உண்மை: குமார வெல்கம

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது அணியின் முதுகில் ஏறி அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முயற்சிப்பதாகவும், அதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்யும் போது யார் அதில் கையெழுத்திட்டது. சிறிசேனவும் இருந்தார் வேண்டாம் என்று சொல்லவில்லையே.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்யும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.

நாம் தற்போது சிறிசேனவை வர்ணிக்கின்றோம். நான் வர்ணிக்க மாட்டேன். எமது முதுகில் ஏறி நாட்டின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட சிறிசேன முயற்சிக்கின்றார்.

நாங்கள் அதனை விரும்பவில்லை. இதுதான் உண்மை எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.