புதிய பிரதமரை நியமிக்க தயாராகும் மைத்திரி! மகிந்தவின் நிலைப்பாடு இதுதான்

Report Print Murali Murali in அரசியல்

தனது பதவியை இராஜினாமா செய்யப் போவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசாங்கத்தை அமைக்கும் தமது எண்ணத்தை கைவிடப்போதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைத்தமை தொடர்பாக நீதிமன்றம் வெளியிடும் அறிவிப்பின் பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராயப்போவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சவை நீக்கி புதிய பிரதமரை நியமிக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் தொடர் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நிலைப்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே, தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்யப் போவதில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.