மீண்டும் மகிந்த அணியினருடன் வசந்த சேனாநாயக்க?

Report Print Murali Murali in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க, ராஜகிரியவில் தற்போது நடைபெறும் நிகழ்வு ஒன்றில் அரசாங்க தரப்பினருடன் கலந்துகொண்டுள்ளார்.

“நாட்டை கட்டியெழுப்பும் தேசிய சபை” என்ற நிகழ்வு ஒன்று ராஜகிரியவில் தற்போது நடைபெறுகிறது. அத்துரலிய ரத்ன தேரர் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறுகின்றது.

குறித்த நிகழ்வில் அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, உதய கம்மன்பில மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச ஆகியோருடன் வசந்த சேனநாயக்கவும் கலந்து கொண்டுள்ளார்.

இதேவேளை, கடந்த வாரம் அரசாங்கத்தில் இருந்து விலகி மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்ட வசந்த சேனாநாயக்க, தனது அமைச்சு பதவியினையும் இராஜினாமா செய்திருந்தார்.

அத்துடன், இனி ஒருபோது கட்சி தாவல்களில் ஈடுபட போவதில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.

எனினும், தற்போது ராஜகிரியவில் நடைபெறும் நிகழ்வில் அரசாங்கத் தரப்பினர்களுடன் வசந்த சேனாநாயக்க கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.