வவுனியா நகரசபையின் எழு நீ நிகழ்வுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களுக்கு அழைப்பில்லை!

Report Print Thileepan Thileepan in அரசியல்

வவுனியா நகரசபையின் எழு நீ நிகழ்வுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினருக்கு அழைப்பில்லை என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் பல்வேறு தரப்புக்களின் விமர்சனங்களுக்கு மத்தியில் எழு நீ விருது வழங்கும் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்வில் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

இந்நிகழ்வில் கலந்து கொள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா நகரசபை உறுப்பினருக்கு அழைப்பு வழங்கப்படவில்லை.

இதனால் அக்கட்சியின் நகரசபை உறுப்பினர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளமாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த நிகழ்வு அரசியல் மயப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த நிகழ்வை ஈ.பி.ஆர்.எல்.எப், ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஈ.பி.டி.பி ஆகிய கட்சி உறுப்பினர்கள் இணைந்து சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.