ரணிலுடன் ஒருபோதும் இணைந்து செயற்பட மாட்டேன்! மைத்திரி விடாபிடி

Report Print Murali Murali in அரசியல்
270Shares

கருஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் ரணில் குறித்த அச்சத்தின் காரணமாகவே பிரதமர் பதவியை நிராகரித்தனர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதியுடன் விருப்பத்துடனேயே ஒருவர் பிரதமராக முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு காணப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் பொது தேர்தல் ஒன்றுக்கு செல்வதே சிறந்தது.

பொது தேர்தலுக்கு செல்வதன் ஊடாகவே சிறந்த தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும். மக்கள் தங்கள் வாக்களிப்பின் மூலம் ஊழல்வாதிகள் மீண்டும் தெரிவு செய்யப்படாத நிலையை உறுதி செய்ய முடிவும்.

ஐக்கிய தேசிய முன்னணியுடன் மீண்டும் இணைந்து பணியாற்றவேண்டிய தேவை உருவானால் நான் அவர்களுடன் எவ்வாறு இணைந்து பணியாற்றுவது என்பது குறித்து ஆராய்வேன்.

ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்பதை இப்போதும் உறுதியுடன் கூறிக்கொள்கின்றேன்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை காண்பிப்பதால் ஒருவர் பிரதமராகமுடியும் என அரசமைப்பில் எங்கும் தெரிவிக்கப்படவில்லை.

ஜனாதிபதியுடன் விருப்பத்துடனேயே ஒருவர் பிரதமராக முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.