ஐ.தே.கட்சிக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை!

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கும் இடையில் இன்று மாலை பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாணும் நோக்கில் நேற்று முன்தினம் இரவும் ஜனாதிபதிக்கும், ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

எனினும் அந்த பேச்சுவார்த்தை எந்த இணக்கமும் காணப்படாமல் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.