பிரதமரின் விசேட உரை! பொது தேர்தல் ஒன்றே சிறந்த வழி என்கிறார் மகிந்த

Report Print Murali Murali in அரசியல்

நாட்டில் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்கும், நாட்டை ஸ்தீரப்படுத்துவதற்கும் பொதுத் தேர்தலுக்கு செல்வதே ஒரே வழி என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரம் தொடர்பில் விளக்கும் வகையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இன்று விசேட உரையாற்றினார்.

இதன்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய பிரதமர், “தேர்தலை வேண்டாம் என்று சொல்லும் கட்சிகள் இருக்கும் ஒரே நாடு இலங்கையே எனவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் வேண்டாம் எனக் கூறும் அரசியல் கட்சிகள் இருக்கும் ஒரே நாடு இலங்கை - மகிந்த ராஜபக்ச

அறிவித்துள்ள பொதுத் தேர்தலை நடத்த வேண்டாம் என கூறும் அரசியல் கட்சிகள் இருக்கும் ஒரே நாடு இலங்கை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ள பிரதமர் மகிந்த ராஜபகச தெரிவித்துள்ளார்.

பிரதமரின் செயலகத்தில் இருந்து ஆற்றிய விசேட உரையில் அவர் இதனை கூறியுள்ளார்.

“இலங்கையில் பதவியில் இருக்கும் ஜனாதிபதி மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்டவர். அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்லது சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மாத்திரமே அகற்ற முடியும்.

வேறு எவருக்கும் அவரது அதிகாரங்களை அகற்ற முடியாது என 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 70(1) நீக்கப்பட்டதாக கூறினாலும் அதனை அவர்கள் வேறு ஒரு இடத்தில் சேர்த்துள்ளனர். 70(1) சரத்து திருத்தப்பட்டதுடன் 19வது திருத்தச் சட்டத்தில் 33 சரத்திற்கு புதிதாக (2) (ஆ) என்ற உப சரத்தை சேர்ந்தனர்.

இந்த சரத்தில் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஏனைய சட்டங்களில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு மேலதிமாக நாடாளுமன்றத்தை கூட்டம், கூட்டத் தொடரை முடிவுக்கு கொண்டு வரவும், நாடாளுமன்றத்தை கலைக்கவும் அதிகாரம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இவ்விதமாக புதிதாக அறிமுகப்படுத்திய 33 (2) (ஆ) சரத்து, 19வது திருத்தச் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்ட 70(1) சரத்திற்கு உட்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனால், 19வது திருத்தச் சட்டம் தொடர்பாக 2015ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், 70(1) சர்த்தில் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கவில்லை.

ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்க வேண்டுமாயின் 70(1) சரத்தில் மாத்திரம் திருத்தம் செய்திருக்க வேண்டும். சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மட்டுமே ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்க முடியும் என்பதன் காரணமாகவே 33(2) (ஆ) உப சரத்துரு மீண்டும் சேர்க்கப்பட்டது.

ஜனாதிபதியின் அதிகாரங்களை சர்வஜன வாக்கெடுப்பின்றி அகற்ற முடியாது என சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர். அழுத்தங்கள் ஏற்படும் என்ற காரணத்தினால், எந்த அரச தலைவரும் வெறுமனே நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை அறிவிக்க மாட்டார்.

பாரதூரமான நேரங்களில் மாத்திரமே அப்படியான முடிவுகளை அரச தலைவர் எடுப்பார். ஸ்திரமற்ற நிலைமையில் இருக்கு நாட்டை ஸ்திரமான நிலைமைக்கு கொண்டு வர இருக்கும் ஒரே ஆயுதம் தேர்தல்.

நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் படி மக்களுக்கே அதிகாரம் இருக்கின்றது நாடாளுமன்றத்திற்கு அல்ல” எனவும் மகிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக செய்தி - ஸ்டீபன்