கூட்டமைப்பிற்கு ரணில் வழங்கிய வாக்குறுதி! வெளிப்படுத்திய மகிந்த தரப்பு

Report Print Murali Murali in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான இணக்கப்பாடு தற்போது அம்பலத்திற்கு வந்திருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மஹரகமவில் தேசிய சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு சமஸ்டி ஆட்சிக்கான அனுமதியைத்தருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதார்.

இதனை அடிப்படையாக கொண்டே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பாக செயற்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த,

ஐக்கிய தேசியக் கட்சியின் கோரிக்கையினை கடவுள் கூட ஏற்றுக்கொள்ளமாட்டார். அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் சீரான முறையில் இடம் பெற்றுவருகின்றது.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மூன்றாவது தடவையாக எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த மேலும் கூறியுள்ளார்.