இன ரீதியான பின்னடைவுகளுக்கு தமிழர்களும் ஒரு காரணம் : தவராசா கலையரசன்

Report Print Nesan Nesan in அரசியல்

இன ரீதியான பின்னடைவுகளுக்கு தமிழர்களும் ஒரு காரணம் எனவும், இப்பொழுது தமிழ் சமூகத்தில் நாகரீகம் என்ற போர்வையில் பிள்ளைகள் பெற்று வளர்ப்பதில் தமிழினம் அக்கறை காட்டுவில்லை என நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

பகல்வள்ளுவர் பாலர் பாடசாலை பிரியாவிடை நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வு இன்று விவேகானந்தா மகாவித்தியாலயத்தில் பாலர் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

அங்கு மேலும் அவர் தெரிவிக்கையில்,

நலிவுற்று அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட இனத்தின் விகிதாசாரம் 2000ஆம் ஆண்டுகளின் பின் கிழக்கு மாகாணத்தில் வீழ்ச்சிப்பாதையில் செல்கின்றது.

இன ரீதியான நிலையில் மூன்றாவது இடத்திற்கு தமிழர்களை பின்தள்ளும் நிலைக்கு பிடி கொடுப்பவர்களாக இருக்கின்றோம். இது வருங்காலங்களில் இந்த நாட்டிலே தமிழர்கள் வாழலாமா என்ற கேள்வி எல்லோரிடமும் தொடுக்கின்றது.

எதற்காக இந்த போராட்டங்கள் மற்றும் இழப்புக்கள் என்பதனை தமிழர்களாகிய நாங்கள் எண்ணிக்கையின் வரைபில் இறங்கு முகமாக சென்று கொண்டே வருகின்றோம்.

தமிழர்களின் இருப்புகளுக்காகவும் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகவும் பன்னெடுங்காலமாக பெரும் போராட்டங்களை செய்தனர் அந்த போராட்டங்கள் சர்வதேச சக்திகளால் நசுக்கப்பட்டது.

இன்று அரசியல் ரீதியான ஜனநாயக நகர்வுகள் தமிழ் தேசிய கூட்டமைப்பினராலே முன்னெடுக்கப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பகரமான சூழ்நிலைகளின் போது தமிழ்தேசிய கூட்டமைப்பினர் நீதித்துறையை அணுகி நாட்டில் ஏற்படவிருந்த பெரும் கலகத்தை தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வின் போது பாலர் பாடசாலை மாணவர்களது நாடகங்கள், நடனம், கலைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.

இதன்போது விவேகானந்த மகா வித்தியாலய அதிபர் க.பேரானந்தம், ஆலய தலைவர்கள், கிராம அபிவிருத்திச்சங்கத்தினர், விளையாட்டு கழக தலைவர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.

Latest Offers