உயர் நீதிமன்றம் எந்த தீர்ப்பு வழங்கினாலும் மகிந்தவின் அரசாங்கம் தொடரும் : வாசுதேவ நாணயக்கார

Report Print Steephen Steephen in அரசியல்

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் எந்த தடைகளும் இல்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி, குருவிட்ட பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers