ஐரோப்பாவின் மலை அரசியான சுவிசுக்கு வருகை தரும் தாயகத்தின் கலையரசி கிருஷாந்தி!

Report Print Murali Murali in அரசியல்

சுவிட்ஸர்லாந்தில் இடம்பெறும் ஐபிசி தமிழா நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஐரோப்பாவின் மலை அரசியான ஸ்ரீமதி கிருஷாந்தி ரவீந்திரன் அவர்கள் சுவிஸ் வரவுள்ளார்.

எதிர்வரும் எட்டாம் திகதி குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அந்த வகையில், ‘ஆடல் வல்லான் அற்புதக் கோலமே அகிலத்தின் ஆதாரம்’ எனப் போற்றப்படும் நடனக் கலையை தாயகத்தில் மிளிரச் செய்த பிரபல நடன ஆசிரியை ஸ்ரீமதி கிருஷாந்தி ரவீந்திரன் அவர்களும் கலந்துகொள்ளவுள்ளார்.

சுவிட்ஸர்லாந்தில் இடம்பெறவுள்ள ‘ஐபிசி தமிழா” நிகழ்வில் நடைபெறவுள்ள மாபெரும் இரண்டு இறுதிச் சுற்றுக்களில் ஒன்றான ‘நாட்டியதாரகை’யின் நடுவர்களில் ஒருவராக தாயகத்திலிருந்து வந்து அவர் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீமதி கிருஷாந்தி ரவீந்திரன், “நாடுகடந்து வந்து இந்த நிகழ்வை சிறப்பிப்பதில் தான் மிகவும் ஆர்வமாகவுள்ளேன்” என கூறியுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீமதி கிருஷாந்தி பல பெயர்சொல்லும் மாணவர்களை தாயகத்திலும் புலம் பெயர் மண்ணிலும் உருவாக்கித் தந்துள்ளதோடு தனக்கென்று நாட்டியத்தில் தனி இடம் பிடித்திருப்பவர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Latest Offers