வாக்குகளை பெற மஹிந்த மீது குற்றம் சாட்டினேன்! தலைகீழாக மாற்றிய மைத்திரி

Report Print Kamel Kamel in அரசியல்

தேர்தல் பிரச்சார நோக்கத்திற்காகவே தாம், தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச மீது குற்றம் சுமத்தியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச 2015 ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியிருந்தால் தாமும் தமது குடும்பமும் ஆறடி மண்ணில் புதையுண்டிருக்க வேண்டுமேன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேர்தல் பிரச்சார மேடைகளில் கூறி வந்தார்.

இந்த விடயம் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று ஜனாதிபதியிடம் வினவியுள்ளது.

இதன் போது, தேர்தல் பிரச்சார நோக்கத்திற்காக மஹிந்த தம்மை கொலை செய்வார் எனக் கூறியதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச தரப்பினர் தம்மை கொலை செய்ய முயற்சித்தனர் என்பது தொடர்பில் எவ்வித அறிக்கைகளும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.