விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கிய நிதி அமைச்சின் முக்கியஸ்தர்! பந்துல என்ன கூறுகிறார்?

Report Print Gokulan Gokulan in அரசியல்

1989, 1990 ஆம் ஆண்டுகளில் நிதி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய, ஆர்.பாஸ்கரலிங்கம், தமிழீழ விடுதலை புலிகளுக்கு, மக்களின் வரிப்பணத்​தை நிதியாக வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஆர்.பாஸ்கரலிங்கம், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிரதான ஆலோசகராகவும் கடமையாற்றியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

புலிகளுக்கு ஆர்.பாஸ்கரலிங்கம் நிதி உதவி வழங்கினார், அதற்கான ஆதாரங்கள் எனக் கூறி மூன்று பற்றுச்சீட்டுக்களை இதன்போது ஊடகவியலாளர்களுக்கு வழங்கியுள்ளார்.