அனந்திக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்! விசாரணைக்காக மூவரடங்கிய குழு

Report Print Jeslin Jeslin in அரசியல்

வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் மேற்கொண்டதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் விசாரணைகளை மே்றகொள்ள மூவரடங்கிய குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது.

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே குறித்த குழுவை அமைப்பதற்காக தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாகாண சபையின் அனுமதியின்றி நிதியை செலவிட்டமை தொடர்பில் அனந்தி சசிதரன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

வடமாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இது தொடர்பான முறைப்பாட்டை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.