நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் வெகு விரைவில்!

Report Print Jeslin Jeslin in அரசியல்

நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் மாற்றம் வெகு விரைவில் கட்டாயம் கிடைக்கப்பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க தலைமையில் முன்னெடுக்கப்பட்ட நீதிக்கான பாத யாத்திரை பயணத்தினூடாக நேற்று இடம்பெற்ற மக்கள் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

போராட்டங்களையும் சவால்களையும் வெற்றி கொள்வதனூடாகவே வெற்றியினை அடைய முடியும்.

வெற்றியின் பயணத்தில் போராட்டங்களைக் கண்டு அஞ்சாததாலே மக்கள் அனைவரும் நீதியின் பயணத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கார்கள் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் புரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.