தமிழர்கள் தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம் எடுக்கப் போகும் மைத்திரி! மஹிந்த தரப்புடன் மந்திராலோசனை

Report Print Vethu Vethu in அரசியல்

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இன்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

இரவு 8 மணிக்கு ஜனாதிபதியை சந்திப்பதற்கு தயார் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சி பிரதிநிதிகளுடன் தொடர்ந்து சந்திப்புகள் இடம்பெற்று வருகின்றது. எனினும் அந்த கலந்துரையாடல்கள் தீர்வின்றி நிறைவுக்கு வந்த நிலையில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்படவிருந்த கலந்துரையாடல் இன்றைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இன்றைய தினம் இந்த கலந்துரையாடலில் தீர்வு ஒன்று பெற்றுக்கொள்ள முடியும் என ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என்றால் அதற்கு தகுதியானவர் ரணில் என இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது தமிழர்களின் பிரச்சனைக்கு எவ்வாறான தீர்வு வழங்கப்படும் என்பது குறித்து ஆராயப்படவுள்ளதுடன், அதற்கு ஆதரவு தெரிவிப்பதா இல்லையா என கூட்டமைப்பு இறுதி முடிவு எடுக்கவுள்ளதாக தெரியவருகிறது.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர் சந்திப்பில் அவதானம் செலுத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு இடையில் நேற்று இரவு சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

கலந்துரையாடலில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, வாசுதேவ நாணயக்கார மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால ஆகியோர் இணைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest Offers