அவசரப்பட வேண்டாம் என மைத்திரிக்கு முக்கிய தரப்பினர் ஆலோசனை!

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் உயர் நீதிமன்றில் நடைபெறவுள்ளது.

ஏழு நீதிபதிகள் அடங்கிய குழுவினர் முன்னிலையில் நாளை முதல் 6ஆம் திகதி வரை மனுக்கள் விசாரிக்கப்படவுள்ளன.

உயர் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை தீர்மானங்கள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என சட்ட ஆலோசகர்கள் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளனர்.

கடந்த வெள்ளிகிழமை மாலை ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்வரும் தினங்களில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட வர்த்தமானி இரத்து செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.