மைத்திரி - மஹிந்த புகைப்படம் தொடர்பில் ஆங்கில ஊடகத்தின் புதிய கண்டுபிடிப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

தாம் எதிர்ப்பார்ப்புக்களுடன் நியமித்த பிரதமரான மஹிந்த ராஜபக்சவை, எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்து விலக்கக்கூடும்.

இந்த நிலையில் இருவரும் இணைந்திருப்பது போன்ற புதிய புகைப்படம் இருவரினதும் கவலையான நிலையை விளக்குவதாக ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகிறது.

சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு - சுகததாச அரங்கில் நடைபெற்றது.

இதன்போதே குறித்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.