கூட்டமைப்பினரும் மைத்திரியும் சந்திக்கின்றனர்! ஒரு விடயம் மட்டுமே பேசப்படுமாம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இன்றைய தினம் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

இன்று மாலை நான்கு மணியளவில் குறித்த சந்திப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அரசியல் கைதிகள் குறித்து மட்டுமே அவதானம் செலுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், குறித்த சந்திப்பின் பின்னர் இரவு எட்டு மணிக்கு ஐக்கிய தேசிய முன்னணியினருக்கும் ஜனாபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.