தற்போது மேல் நீதிமன்றில் மஹிந்த உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு

Report Print Shalini in அரசியல்

தற்போதைய பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என்ற உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த மனு மீதான விசாரணைகள் மேன்முறையீட்டு நீதிமன்றில் தற்சமயம் இடம்பெறுகின்றன.

கடந்த 23 ஆம் திகதி, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 நாடாளுமன்ற உறுப்பினர்களினால் கையொப்பம் இடப்பட்ட நிலையில் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு கடந்த வெள்ளிக்கிழமை, மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதிகள் குறித்த மனு மீதான விசாரணைகளை இன்றைய தினம் வரை ஒத்தி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.