தமிழீழத்திற்காக பிரபாகரன் ஆயுதமேந்தினார்! ஆனால் சுமந்திரன்..??

Report Print Jeslin Jeslin in அரசியல்

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதமேந்தி போராடிய தமிழீழத்தை இன்று சுமந்திரன் ஒப்பந்தத்தில் பெற முயற்சிக்கின்றார்.ஐக்கிய தேசிய கட்சி தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள நாட்டையே காட்டிக் கொடுக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனுவின் கட்சி அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரனும் எதிர்பார்த்த விடுதலை புலிகளின் அமைப்பு தற்போது வடக்கில் உருவாகி வருகின்றது.

தேசிய அரசாங்கம் கடந்த மூன்று வருடகாலமாக நாட்டை பிரிக்கும் செயற்பாடுகளை மாத்திரமே முன்னெடுத்தது எனவும் இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.