ஐக்கிய தேசிய முன்னணியின் இறுதித் தீர்மானம்

Report Print Kamel Kamel in அரசியல்

பிரதமராக ரணில் விக்ரமசிங்கவே பதவி வகிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணி இறுதித் தீர்மானம் எடுத்துள்ளது.

அலரி மாளிகையில் இன்று பகல் ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்களின் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதன் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்தப்பட உள்ள சந்திப்பில் பிரதமர் பதவி குறித்து திட்டவட்டமாக அறிவிக்கப்படும் என ஐக்கிய தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பு விடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளினதும் தலைவர்கள் கூட்டாக இணைந்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியினதோ அல்லது ஐக்கிய தேசிய முன்னணியினதோ தலைவரை தெரிவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.