மகிந்த மீதான நீதிமன்றின் உத்தரவு! சுமந்திரன் கூறும் விளக்கங்கள்

Report Print Kamel Kamel in அரசியல்

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் அடிப்படையிலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவு தொடர்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த 14ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கிடையாது என்ற அடிப்படையில் நம்பிக்கையில்லா தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் அடிப்படையில் நாம் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தோம்.

அதனை ஏற்றுக்கொண்டே மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே மஹிந்தவை மீளவும் பிரதமராக நியமிக்க முடியாது என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.