நாளை அமைச்சுகளுக்குள் அதிரடியாக நுழையப் போகும் ரணிலின் அமைச்சர்கள்

Report Print Vethu Vethu in அரசியல்

நாளைய தினம் அமைச்சுகளுக்கு சென்று பணிகளை தொடரவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் நாளை முதல் தங்கள் அமைச்சுக்களில் பணிகளை ஆரம்பிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமராக அண்மையில் நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவைக்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும், அதற்கமைய அதற்கு முன்னர் இருந்த அரசாங்கம் அதேபோன்று தொடர்ந்து நடத்தி செல்லப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று மாலை காலியில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றம் தற்போது மரா இல்லை சிரா மாத்திரம் என தீர்மானித்துள்ளது. அரச வீட்டிற்கு நாங்கள் திரும்பி வருகின்றோம். எங்கள் பிரதமரும் நாளை பணியை ஏற்றுக் கொள்வார்.

நாளை காலை நாங்கள் அமைச்சுக்களுக்கு செல்வோம். நீதிமன்றத்திலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உலக வரலாற்றில் முதல் முறையாக பிரதமர் பதவி, அமைச்சர் பதவிகள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் தடை செய்யப்பட்டு அரசாங்கம் ஒன்று வீட்டிற்கு அனுப்பப்படுகின்றது.

எப்படி சிறிசேனவின் வேலை. உண்மை வென்றுவிட்டது. இனி மஹிந்தவுக்கு பிரதமர் பதவி இல்லை. இன்னமும் விளையாடினால் ஜனாதிபதி அலுவலகத்தை சுற்றிவளைப்போம். நாங்கள் தயார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.