மைத்திரி விடாபிடி! பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பு தோல்வி என ஐக்கிய தேசிய முன்னணி அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்திருந்தனர்.

நாட்டின் தற்போதைய நிலைமை, ஆட்சி அதிகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவி வகிக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியினர் அண்மையில் ஜனாதிபதியை சந்திக்கும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், ஜனாதிபதியுடான இன்றைய சந்திப்பும் வெற்றியளிக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான லக்ஸ்மன் கிரியல்ல ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டுமென தாம் கோரிக்கை விடுக்க உள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியினர் முன்னதாக அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவி வழங்கப் போவதில்லை என ஜனாதிபதி உறுதியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.