யார் விரும்பினாலும் ரணிலுக்கு பிரதமர் பதவி இல்லை! மைத்திரி அதிரடி

Report Print Kamel Kamel in அரசியல்
யார் விரும்பினாலும் ரணிலுக்கு பிரதமர் பதவி இல்லை! மைத்திரி அதிரடி

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் ஒட்டுமொத்த 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பினாலும், ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது இந்த விடயத்தை ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பவருக்கே பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டுமென அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் வாதமொன்றை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments