மைத்திரியின் நிலைப்பாட்டுக்கு இணங்கும் வகையிலேயே மஹிந்தவின் அறிக்கை

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாட்டுக்கு இணங்கும் வகையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பினைத் தொடர்ந்து பிரதமரும், ஜனாதிபதியும் சந்தித்தனர் எனவும், இந்த தீர்ப்பு தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு என்ன எனவும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதன் போது, ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கு இணங்கும் வகையிலேயே பிரதமர் மஹிந்த கருத்து வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நீதிமன்றின் தீர்ப்பு குறித்து இணங்கப் போவதில்லை என மஹிந்த ராஜபக்ச ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.