ஊடகவியலாளர்கள் செய்தி அறிக்கையிடும் போது இந்த விடயத்தில் கவனம் தேவை

Report Print Kamel Kamel in அரசியல்

ஊடகவியலாளர்கள் செய்தி அறிக்கையிடும் போது சில விடயங்கள் தொடர்பில் நிதானமாகவும் கவனமாகவும் இருக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பில் அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்பொழுது பிரதமர் எவரும் கிடையாது, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் செய்தி அறிக்கையிடும் போது பிரதமர், அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் என குறிப்பிட்டு செய்தி அறிக்கையிடக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்சவை முன்னாள் பிரதமர் எனவும் அழைக்க முடியாது எனவும் திருட்டுப் பிரதமர் என்றே அழைக்க வேண்டி வரும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் மஹிந்தவை பிரதமர் எனக் குறிப்பிட்டால் அது பாரிய சட்ட சிக்கல்களை உருவாக்கும் எனவும், குறித்த ஊடக நிறுவனம், ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.