இப்போதாவது அப்படிச் செயற்படுங்கள்? மைத்திரியிடம் ரணில் கோரிக்கை

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

பொறுப்பிலுள்ளவர்கள் அரசியல் யாப்பை பாதுகாக்க முடியாவிடின் அப்பொறுப்புக்களில் இருப்பதற்கு எந்தவித உரிமையும் இல்லை என்று முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க,

இப்போதாவது அரசியலமைப்புக்கு ஏற்ப செயலாற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் பிரதமர், அமைச்சர்கள் ஆகியோரிடமும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசியல் யாப்புக்கு முரணில்லாது செயற்படுவதாக கூறிக் கொள்பவர்கள் அரசியல் யாப்புக்கு எதிரானவர்களாக கருதப்பட வேண்டியுள்ளனர். சட்டத்தின்படி பணியாற்றுமாறும் அரச அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

இதேவேளை பொறுப்பிலுள்ளவர்கள் அரசியல் யாப்பை பாதுகாக்க முடியாவிடின் அப்பொறுப்புக்களில் இருப்பதற்கு எந்தவித உரிமையும் இல்லை. பொறுப்புக்களிலுள்ள சகலரும் அரசியலமைப்பைப் பாதுகாப்பதாக சத்தியப்பிரமாணம் செய்தள்ளனர் என்பதை நன்கு மனதில் கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers