விருப்பு வெறுப்புகளுக்கு அமைய பிரதமரை நியமிக்க முடியாது - சஜித் பிரேமதாச

Report Print Steephen Steephen in அரசியல்

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி மேற்கொண்ட சட்டவிரோத சூழ்ச்சி காரணமாகவே நாட்டில் தற்போதைய குழப்பங்களும் தேசிய ரீதியான அனர்த்தமும் உருவானது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உயர் நீதிமன்றத்திற்கு வெளியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க சட்டரீதியான பிரதமர். அநீதியான முறையில் மகிந்த ராஜபக்ச பிரதமரானார். இதற்கு ஒருவருக்கு பெரும்பான்மை இருந்தாலும் பிரதமராக நியமிக்க மாட்டேன்.

மூன்றாவதாக ஒருவரை பரிந்துரைக்குமாறு கூறுகின்றனர். ஏற்கனவே இரண்டு பிரதமர்கள். மற்றுமொருவர் வந்தால், மூன்றாவது பிரதமர். இது என்ன பைத்தியக்காரத்தனம்.

பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பவருக்கு பிரதமர் பதவியை வழங்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் வேறு யாரும் அல்ல பிரதமர் ரணில் விக்ரமசிங்க. தமது விருப்பம் மற்றும் ஆசைக்கு அமைய எவரும் பிரதமராக பதவிக்கு வர முடியாது. பிரதமராக நியமிக்கவும் முடியாது.

நாடாளுமன்றத்தில் இருக்கும் 225 பேரும் பிரதமராக முடியாது. சட்ட விரோதமாக நீக்கப்பட்ட சட்ட ரீதியான பிரதமருக்கு பெரும்பான்மை இருப்பதால், அவருக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers