நாடாளுமன்றத்தில் நடப்பவை கேலிக்குரியன - தினேஷ் குணவர்தன

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்றத்தில் இன்று நடக்கவிருப்பதாக அச்சிட்டு அனுப்பட்ட நிகழ்ச்சி நிரல்படி நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்திற்கு வெளியில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடப்பவை கேலிக்குரிய நடவடிக்கைகள் என்று நாங்கள் கூறியது சரியானது. சபாநாயகரும், நாடாளுமன்றமும் கேலித்தனமாக நடந்துக்கொள்ள முடியாது.

அரசியலமைப்புக்கும், நிலையியல் கட்டளைகளுக்கும் அமைய சபாநாயகர் செயற்பட்டால், அது சிறந்த ஜனநாயகம். நீதிமன்றத்தில் உள்ள ஒரு விடயத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க கூடாது என்பது நாடாளுமன்றத்தின் அடிப்படை தர்மம்.

சபாநாயகரால் அதனை காலில் எட்டி உதைக்க முடியாது. இவ்வாறு நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரான விடயத்தில் எமக்கு பங்களிப்பு வழங்க முடியாது. இதன் காரணமாகவே நாடாளுமன்றத்தை பகிஷ்கரித்தோம் எனவும் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers