ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் மைத்திரி அணியுடன் கூட்டணி?

Report Print Dias Dias in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமொன்று இன்று மாலையளவில் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இதில் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது ரணில் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் நாட்களில் சிறிலங்கா சுதந்திர கட்சியினர் முன்னர் இருந்தது போன்ற நல்லாட்சியை ஏற்படுத்த விரும்புகின்றனர். அதற்கு நாம் இணங்கி, நாட்டை கட்டிக் காப்பாற்ற வேண்டிய கடப்பாடு உள்ளது.

அப்படி ஆட்சியமைக்கும் பட்சத்தில் நாட்டின் நலன் கருதி, ஜனாதிபதியின் கடந்த கால செயற்பாடுகளை விமர்சிப்பதை விட்டு நாட்டு நலன் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ரணிலின் இந்த கருத்திற்கு ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சாதகமாகவும், வேறு சிலர் பாதகமாகவும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில், ஒருவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்த நிலைப்பாட்டிற்கு இணங்கியிருக்க கூடும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், ஜனாதிபதி இந்த இணக்கப்பாட்டிற்கு ஒத்துழைக்கவில்லையெனில் அவரின் அரசியல் மற்றும் தனிப்பட்ட எதிர்காலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Latest Offers