மகிந்தவை சிறையில் அடைக்காமையால் ரணிலுக்கு நேர்ந்த கதி

Report Print Sujitha Sri in அரசியல்

மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்து கொண்டு ஏன் தேர்தலை நடத்த வேண்டுமென்று எதிர்பார்க்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

மகிந்த ராஜபக்ச இந்த நாட்டில் எல்லா பதவிகளையும் அனுபவித்துள்ளார். அவர் ஏன் பிரதமராக இருந்து கொண்டு தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்பார்க்கிறார்.

ஏனென்றால் தான் பிரதமராக இருக்கும் போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டால் பல ஊழல்களை செய்து அதன் மூலம் திரும்பவும் ஆட்சிக்கு வரலாம் என்பது தான் அவரதும், அவரின் குழுக்களினதும் எண்ணமாக இருக்கிறது.

அந்த அடிப்படையில் தான் அவர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் செய்த ஊழல் எல்லாருக்கும் தெரியும்.

ஆனால் ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்ததும் அவர்களை கைது செய்து உள்ளே போடாத பாவத்தை தான் இப்போது ரணில் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.

அதைச் செய்திருக்க வேண்டும். ராஜபக்ச குழுவினரை உள்ளே போட்டிருக்க வேண்டும். அப்பொழுது தான் இந்த நாட்டில் நிம்மதியாக அரசியலை செய்யக் கூடியதாக இருந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.


Latest Offers