மைத்திரியும், மகிந்தவுமே பொறுப்பு கூறவேண்டும்!

Report Print Murali Murali in அரசியல்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச ஆகியோரே பொறுப்பு கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“நாட்டில் நிலவும் நெருக்கடியை ஜனாதிபதி உடனடியாக தீர்க்க வேண்டும். இல்லையெனில் ஜனாதிபதி சுயாதீன நீதிமன்றம் மற்றும் மக்கள் நீதிமன்றத்தில் இருந்து தப்பிக்க முடியாது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற மகிந்த ராஜபக்ச ஆகியோரே பொறுப்பு கூறவேண்டும்.

இந்த நெருக்கடி நிலை காரணமாக நாள்தோறும் பல மில்லியன் ரூபாய் இழப்பீடு ஏற்படுகின்றது” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers