மைத்திரிக்கு மன உளைச்சல்...? காரணம் இதுதான்!

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்க கூடும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

“நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக ஜனாதிபதிக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருக்க கூடும். இதன் காரணமாகவே 225 பேர் விரும்பினாலும் பிரதமர் பதவியை வழங்கப் போவதில்லை என கூறுகின்றார்.

எனினும், ஜனாதிபதிக்கு அவ்வாறு சொல்ல முடியாது. ஜனாதிபதி அவ்வாறு தெரிவிப்பாராக இருந்தால் வீட்டில் உள்ளவர்களுக்கா? பிரதமர் பதவியை வழங்கப் போகின்றார்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers