குற்றவியல் சட்டத்தில் சிக்கிய பாதுகாப்பு படைகளின் பிரதானியின் பணி நிறுத்தப்படுமா?

Report Print Kamel Kamel in அரசியல்

பாதுகாப்புப் படைகளின் பிரதானியினது பணி இடைநிறுத்தப்பட வேண்டுமென கொழும்பு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்க சேவையில் பணியாற்றி வரும் அதிகாரியொருவர் குற்றவியல் சட்டத்தின் கீழ் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டால் அவரது பணி இடைநிறுத்தப்பட வேண்டியது வழமையானது விதியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நியதிலிருந்து எவ்வாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்னவிற்கு விலக்க அளிக்கப்பட்டது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

11 இளைஞர்களை கடத்தி காணாமல் போகச் செய்த பிரதான சந்தேக நபரான நேவி சம்பத் என்பவருக்கு அடைக்கலம் வழங்கியதாகவும் வெளிநாடு தப்பிச் செல்ல உதவியதாகவும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்னவிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அண்மையில் இந்த குற்றச்சாட்டின் பேரில் கைதான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்னவிற்கு நேற்றைய தினம் கோட்டே நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது.

அட்மிரல் ரவீந்திர தொடர்ந்தும் பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக செயற்பட்டு வருவதாகவும், அவரது பணி இடைநிறுத்தப்படவில்லை எனவும் குறித்த ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது.

Latest Offers