தமிழ் தேசிய கூட்டமைப்பு - ரணிலுக்கு இடையில் திரைமறைவிலுள்ள ஒப்பந்தம் என்ன?

Report Print Vethu Vethu in அரசியல்

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இடையில் எவ்வித ஒப்பந்தங்களும் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

உதய கம்மன்பில ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இடையிலான ஒப்பந்தம் நாட்டிற்கு ஆபத்தானதெனவும், அந்த ஒப்பந்தத்தை நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கருத்து வெளியிட்ட தயா கமகே,

ஒப்பந்தங்களின்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றுமல்ல மக்கள் விடுதலை முன்னணியும் எம்முடன் இணைந்திருப்பதற்கு காரணம் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மாத்திரமே. தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களின் ஆரம்ப நிலைப்பாட்டை மாற்றியுள்ளது.

நாட்டிற்கு நெருக்கமான இணக்கப்பாட்டிற்கே கூட்டமைப்பு முன்வந்துள்ளது. அதற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்பு பௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்கப்படும் என கூறப்பட்டதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

மஹிந்த ராஜபக்ச எப்போதுமே பிரிவினைவாதம் குறித்து பேசுகின்றார். அவ்வாறு பேசுபவர் தான் அன்று பிரபாகரனுக்கு பணம் வழங்கி தமிழ் மக்கள் வாக்களிப்பதனை நிறுத்தினார். அவர்கள் அன்று அதனை செய்யாமலிருந்திருந்தால் நாடு இன்று இந்த நிலைமையில் இருக்காது. இதனை விட சிறந்த நாட்டில் வாழ சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்.

அரசியல் நன்மைக்காக இனியுடன் இனவாதத்தை பயன்படுத்த வேண்டாம் என அனைத்து தரப்பினரிடமும் மீண்டும் கேட்டுக்கொள்கின்றேன் என தயாகமகே தெரிவித்துள்ளார்.