மைத்திரிக்கு எதிராக குற்றவியல் விசாரணை பிரேரணை!

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் விசாரணை பிரேரணை கொண்டு வருவதே, ஐக்கிய தேசிய கட்சிக்கு உள்ள ஒரே தெரிவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னிணியின் நாடாளுமன்ற உறுப்பினர் W.D.J.செனவிரத்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிரான குற்றவியல் விசாரணைப் பிரேரணையை பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதே ஐக்கிய தேசிய கட்சியின் நோக்கமாகும்.

ஏற்கனவே ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் விசாரணைப் பிரேரணை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும் ஐக்கிய தேசிய கட்சிக்கு 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. இதன் காரணமாக உயர் நீதிமன்றில் அடிப்படை மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுக்கள் தற்போது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து 19ஆம் திருத்தச் சட்டத்தை மாற்றுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் விசாரணை பிரேரணை கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படுவதற்கு 150 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.